ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் 260 மெகாவாட் திறன் கொண்ட துல்ஹஸ்தி இரண்டாம் நிலை நீர்மின் நிலையத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் ஆனது பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் C. சுப்பிரமணியத்தின் பசுமைப் புரட்சி மரபைக் கௌரவிக்கும் வகையில் அவரது பெயரால் பெயரிடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் சேகரிக்கப்பட்ட படைப்புகள் மற்றும் உரைகளின் இறுதிக் கட்ட 12 தொகுதித் தொடரான மகாமனா வாங்மாயை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் புது டெல்லியில் வெளியிட்டார்.
அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெயஸ்ரீ உல்லால், ஹுருன் இந்தியா இதழின் 2025 ஆம் ஆண்டின் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உலகின் பணக்காரத் தொழில்முறை மேலாளராக தர வரிசைப் படுத்தப்பட்டுள்ளார்.
முதன்முறையாக அசாமின் ககோய் காப்பு வனப்பகுதியில் ஒரு படைச் சிறுத்தை தென்பட்டது.
இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதோடு1972 ஆம் ஆண்டு இந்தியாவின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் முதல் அட்டவணையின் கீழ் இது பாதுகாக்கப் படுகிறது.
மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தைச் சேர்ந்த சோகோன் கிரிச்சேனா, 'மணிப்பூரின் மலர் பெண்மணி' என்று அழைக்கப்படுகிறார் என்பதோடுமேலும் அவர் பாரம்பரிய வேளாண் அறிவை நவீன வணிக நடைமுறைகளுடன் கலப்பதன் மூலம் மலர் வளர்ப்பை ஊக்குவிக்கிறார்.
வடகிழக்கு இந்தியாவில் பெண்களின் தலைமை, சுயசார்பு மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றில் அவர் ஆற்றியப் பணிகளுக்காக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமரால் தேசிய அளவில் அவர் அங்கீகரிக்கப்பட்டார்.