மகளிர் சர்வதேசப் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீராங்கனை மற்றும் நான்காவது வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.
தேசியப் புலனாய்வு முகமையின் (NIA) இடைக்காலத் தலைமை இயக்குநராக இந்தியக் காவல் பணி அதிகாரியான ராகேஷ் அகர்வாலை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
புளோரிடாவில் நடைபெற்ற உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இஸ்ரேலின் மிக உயரிய குடிமகன் விருதான இஸ்ரேல் அமைதிக்கான பரிசு வழங்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
சீனாவின் தேசியப் பாதுகாப்பு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (NUDT) ஆராய்ச்சியாளர்கள், ஒரு மாக்லெவ் (காந்த மிதவை) சோதனை வாகனத்தின் வேகத்தினை வெறும் இரண்டு வினாடிகளில் மணிக்கு 700 கிமீ வேகத்திற்கு முடுக்கி உள்ளனர்.
இது வரை உலகில் உள்ள வேகமான மீக்கடத்தி காந்த மிதவுந்து அமைப்பு என்று சாதனை படைத்த மாக்லெவ் என்று விவரிக்கப்படுகிறது.