சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் (ITR) நீண்ட தூர தாக்குதல் வரம்பு கொண்ட வழிகாட்டப்பட்ட ஏவு கலத்தின் (LRGR-120) முதல் ஏவுதல் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாக நடத்தியது.
கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற FIDE (Fédération Internationale des Échecs) 2025 ஆம் ஆண்டு உலக விரைவு சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய சதுரங்க வீரர்கள் கோனேரு ஹம்பி மற்றும் அர்ஜுன் எரிகைசி வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த திவ்யா அருள், ஐரோப்பாவின் மிகவும் உயரமான சிகரமான ரஷ்யாவில் உள்ள எல்ப்ரஸ் மலையின் உச்சியை (5,642 மீட்டர்) வெற்றிகரமாக அடைந்தார்.
குளிர்கால வலசை காலத்தில் முதுமலை புலிகள் வளங்காப்பகத்தில் (MTR) ஓர் அரிய கிழக்கு இராசாளிக் கழுகு (அக்குய்லா ஹெலியாகா) தென்பட்டது.