பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது ஒரே ஏவு அமைப்பிலிருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு பிரளய் எறிகணைகளை ஒரே நேரத்தில் ஏவி சோதனையை மேற்கொண்டது.
போதைப்பொருள் உபயோகக் கண்டுபிடிப்பை விரைவாகக் கண்காணிப்பதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆனது PathGennie எனும் புதிய திறந்த மூல மென்பொருளினை (அனைவருக்குமான) உருவாக்கியுள்ளது.
29வது தேசியப் பாறை மற்றும் கயிறு ஏறுதல் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் இளம் வீராங்கனைகள் (17 வயதுக்குட்பட்டவர்கள்) பிரிவில் அமீரா கோஸ்லா தங்கப் பதக்கத்தை வென்றார்.
மகளிர் ஆசிய கோப்பைப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கத்தினை வென்று 2025 ஆம் ஆண்டினை நிறைவு செய்தது.
சீன இராணுவம் (PLA) ஆனது அதன் "நீதி திட்டம் 2025" என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, தைவான் அருகே எறிகணைகளை ஏவி இராணுவப் பயிற்சிகளை நடத்தியது.
சந்தாலி மொழியின் ஓல் சிக்கி எழுத்து வடிவத்தின் நூற்றாண்டு விழா ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்றது.
பண்டிட் இரகுநாத் முர்மு, ஓல் சிக்கி எழுத்து வடிவத்தின் தந்தையாகக் கருதப் படுகிறார்.
கர்நாடக உத்தி சார் மற்றும் புலனாய்வுப் பிரிவானது, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு தரவுத் தளங்களிலிருந்து செயலி நிரலாக்க இடைமுகங்களை (API) ஒருங்கிணைக்க உள்ளது.
இந்த ஒருங்கிணைந்தத் தரவுத் தொகுப்பு, வளர்ந்து வரும் வாய்ப்புகள், துறை சார் இடைவெளிகள் மற்றும் பிராந்தியப் பணியாளர் தேவைகளை அடையாளம் காண ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பினால் செயலாக்கப்படும்.
இந்திய இராணுவம் ஆனது iStent சிகிச்சை மூலம் இந்தியாவின் முதல் முப்பரிமாண ஃப்ளெக்ஸ் அக்வஸ் ஆஞ்சியோகிராஃபியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
முன்னோடியான கிளகோமா (கண் அழுத்த நோய்) செயல்முறை ஆனது மீள முடியாத பார்வை இழப்பிற்கான முக்கியக் காரணத்தை துல்லியமாக கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினைக் குறிக்கிறது.