18 வயதான இந்திய மலையேறும் வீராங்கனையான மும்பையைச் சேர்ந்த காம்யா கார்த்திகேயன், தென் துருவத்தை அடைந்து, தென் துருவத்திற்கு பனிச்சறுக்கு செய்த இளம் இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது இளம் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையம் (IKDRC) ஆனது 2025 ஆம் ஆண்டில் 500 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்து, ஒரே ஆண்டில் இந்த மைல்கல்லை எட்டிய இந்தியாவின் ஒரே பொதுத்துறை மருத்துவமனையாக மாறியுள்ளது.
கோட்டா-நாக்டா பிரிவில், இரயில் அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தை எட்டியதுடன், வந்தே பாரத் ஸ்லீப்பர் வசதியுடன் கூடிய இரயிலின் இறுதிக் கட்டத்தின் மீதான அதிவேக இயக்கச் சோதனையை இந்திய இரயில்வே நிர்வாகம் வெற்றிகரமாக முடித்தது.