2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இந்தியாவின் அகலக் கற்றை சேவை சந்தாதாரர் தளம் ஆனது 100 கோடி (1 பில்லியன்) பயனர்களைத் தாண்டியது என்ற நிலையில்இந்தியாவில் இந்த எண்ணிக்கையை எட்டியது இது முதல் முறையாகும் என்பதோடுஇது 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பதிவான ஆறு மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது.
வாரன் பஃபெட் பெர்க்சையர் ஹாத்வேயின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார் என்பதோடுஅவருக்கு அடுத்த படியாக கிரெக் ஆபெல் நியமிக்கப்பட்டாலும், பஃபெட் தலைவராகத் தொடர்கிறார்.
44வது ஜூனியர் தேசிய கோ கோ சாம்பியன்ஷிப் போட்டியானது கர்நாடகாவின் பெங்களூருவில் தொடங்கியது.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 01 ஆம் தேதியன்று உலகளவில் அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக உலகளாவிய குடும்ப தினம் ஆனது அனுசரிக்கப் படுகிறது என்பதோடுதேசியம், எல்லைகள் அல்லது இனத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளனர் என்பதை அது நன்கு வலியுறுத்துகிறது.