பரதநாட்டிய நடனக் கலைஞர் ஊர்மிளா சத்தியநாராயணனுக்கு நிருத்ய கலாநிதி விருது வழங்கப்பட்டது.
கலாச்சார மற்றும் பாரம்பரியச் சுற்றுலாவை வலுப்படுத்துவதற்கும், கேரளாவை உலகளாவியப் பாரம்பரியத் தளமாக நிலை நிறுத்துவதற்காகவும் என்று, கேரளாவின் கொச்சியில் மூன்று நாட்கள் அளவிலான சர்வதேச நறுமணப் பொருட்கள் வழித்தட மாநாடு நடைபெற உள்ளது.
வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் சார் தீவிரவாதம், கொக்கையின் இறக்குமதி மற்றும் சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டு, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 03 ஆம் தேதியன்று, அமெரிக்க காவலில் வைக்கப்பட்டார்.
மன ஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக என்று சர்வதேச மனம்-உடல் நல தினம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 03 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.