மத்திய உள்துறை அமைச்சர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கண்காணிப்பு, தகவல் தொடர்பு மற்றும் பல தரப்பு பாதுகாப்பு மற்றும் நிர்வாக முகமைகளுக்கிடையே ஒருங்கிணைப்பைச் செயல்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார்.
விமான மேம்பாட்டு முகமை (ADA) ஆனது, பெங்களூருவில் 'Aeronautics 2047' என்ற தலைப்பிலான இரண்டு நாட்கள் அளவிலான தேசிய கருத்தரங்கைத் தொடங்கியது.
இந்த நிகழ்வு ஆனது, தேஜாஸ் எனும் இலகுரக போர் விமானத்தின் (LCA) 25 ஆண்டு கால வெற்றிகரமான பயணத்தினைக் குறிக்கிறது.
ஆராய்ச்சி, கல்வி, புதுமை மற்றும் புத்தொழில் நிறுவனங்களில் அதன் உலகளாவிய இருப்பை விரிவுபடுத்துவதற்காக மதராஸின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (IIT) IITM உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
இந்த முன்னெடுப்பு மதராஸ் IIT நிறுவனத்தினை ஒரு பன்னாட்டுப் பல்கலைக் கழகமாக நிலைநி றுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இம்பால் அகில இந்திய வானொலியிலிருந்து (ஆகாஷ்வாணி) தடௌ மொழியில் நேரடி வானொலி நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்க பிரச்சார் பாரதி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
தடௌ ஆனது 1956 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் உத்தரவின் கீழ் அங்கீகரிக்கப் பட்ட மணிப்பூர் மாநிலத்தின் பெரும் தனித்துவமான பட்டியலிடப் பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்தது ஆகும்.