கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்ட உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பல் மற்றும் ICG கடற்படையில் மிகப்பெரிய கப்பலான இந்தியக் கடலோர காவல்படை கப்பல் (ICGS) சமுத்திர பிரதாப், கோவாவில் படையில் இணைக்கப்பட்டது.
மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி புனேவில் காலமானார்.
மத்திய இரயில்வே இணை அமைச்சராகப் பணியாற்றிய அவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) முன்னாள் தலைவராகப் பணியாற்றினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தினைச் சேர்ந்த பாத்திமா அப்துல் ரஹ்மான் அல் அவதி, அண்டார்டிகாவில் உள்ள வின்சன் மலையில் ஏறிய இளம் அரேபியர் ஆனார்.
மெக்சிகோவின் போபோகாட்பெட்ல் எரிமலையின் உள்ளக பாறைக் குழம்பின் இயக்கத்தை நன்கு புரிந்துகொள்வதற்கான அதன் முதல் முப்பரிமாண (3D) படங்களை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
சமூக மற்றும் தொழில்துறை உள்ளடக்கத்தின் அடிப்படையில், பெங்களூரு 53.29 என்ற அதிக நகர உள்ளடக்க மதிப்பெண்ணுடன் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் பெண்களுக்கு சிறந்த நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டது.