பால்வளத் துறையில் நிலைத்தன்மையை மேம்படுத்துவதிலும் விவசாயிகளின் நலனிலும் ஆற்றிய தலைமைப் பண்பிற்காக ஆவின் நிறுவனத்திற்கு 'டெய்ரி டைட்டன் விருது' வழங்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் உள்ள ஜிந்த் முதல் சோனிபட் வரையிலான வழித்தடத்தில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயிலின் சோதனை ஓட்டங்களை இந்தியா தொடங்க உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிராந்திய செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலானது, மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்று சூத்திரங்கள் மற்றும் இந்திய செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தின் ஏழு சக்கரங்களை அடிப்படையாகக் கொண்டது.