TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 16 , 2026 6 days 40 0
  • சத்தீஸ்கர் மாநிலம் ஆனது ராய்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (APEDA) பிராந்திய அலுவலகம் திறக்கப்பட்டது.
  • விரைவான அஞ்சல் விநியோகத்தை வழங்குவதற்காக வேண்டி, விரைவு அஞ்சல் தொகுப்பிற்குள் மேம்பட்ட விரைவு விநியோக விருப்பத் தேர்வுகளான ஸ்பீட் போஸ்ட் 24 மற்றும் ஸ்பீட் போஸ்ட் 48 ஆகியவற்றை இந்திய அஞ்சல் துறை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • கோவாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீனிவாஸ் டெம்போவுக்கு இத்தாலி கவாலியர் டெல்'ஆர்டைன் டெல்லா ஸ்டெல்லா டி'இட்டாலியா விருதினை வழங்கியது.
  • பெங்களூருவைச் சேர்ந்த இந்திய இராணுவ அதிகாரி மேஜர் சுவாதி சாந்த குமார், ஈக்குவல் பார்ட்னர்ஸ் என்ற தனது திட்டத்திற்காக, நீடித்த அமைதிக்கான 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.நா. பொதுச் செயலாளர் விருதை வென்றுள்ளார்.
  • சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) கழகத்தின் நிலத்தடி சுரங்கப்பாதையின் மீது கட்டப்படுகின்ற இந்தியாவின் முதல் சாலை வழிப் பாலத்தில் முதல் தளத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
    • இது சென்னை தேனாம்பேட்டை-சைதாபேட்டை மேம்பாலம் இயங்கும் மெட்ரோ சுரங்கப்பாதையின் மேலே கட்டப்பட்ட உலகின் முதல் மேம்பாலமாகும்.
  • ஜப்பானின் தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (NICT) ஆனது, வினாடிக்கு 2 டெராபிட்கள் (Tbit/s) என்ற வேகத்திலான உலகின் முதல் வளி மண்டல ஒளியியல் (FSO) தகவல் தொடர்பை அடைந்தது.
    • இந்த சோதனையானது செயற்கைக் கோள்கள் மற்றும் உயரமான தள நிலையங்களில் (HAPS) பொருத்தக்கூடிய சிறிய ஒளியியல் முனையங்களைப் பயன்படுத்தியது.
  • குடிமை-இராணுவ ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்காக என இந்திய இராணுவம் மகாராஷ்டிராவின் திகி மலைத்தொடரில் "சஞ்சா சக்தி" பயிற்சியை நடத்தியது.
    • இது தெற்கு படைப் பிரிவின் (மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா பகுதி) கீழ் நடைபெறும் ஒரு இராணுவ-குடிமை கலப்பு பயிற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்