TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 18 , 2026 4 days 40 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆனது, 12 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தச் செயல்திறனை வெளிப்படுத்திய, அதி குளிர் நிலையிலான மற்றும் முழு அளவிலான ஸ்க்ராம்ஜெட் எரிபொருளின் நீண்ட காலத் தரை இயக்கச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
  • முன்னாள் இந்திய வெளியுறவுச் சேவை (IFS) அதிகாரியான D. B. வெங்கடேஷ் வர்மா, 2026–27 ஆம் காலக் கட்டத்திற்கான ஆயுதக் குறைப்பு விவகாரங்கள் குறித்த ஐ.நா. ஆலோசனைக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • நவி மும்பை சர்வதேச விமான நிலையம், நவி மும்பையில் விவசாயிகள் மற்றும் உள்ளூர் உரிமைகள் இயக்கங்களுடன் தொடர்புடைய தலைவரான D B பாட்டீலின் பெயரால் பெயரிடப்பட உள்ளது.
  • நெல்லூர் மாவட்டத்தில் உள்ள தகதர்த்தி பசுந்தட விமான நிலையத்திற்கு ஆந்திரப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
    • இந்த விமான நிலையம் ஆனது ஆந்திரப் பிரதேசத்தின் 8வது விமான நிலையமாக இருக்கும் என்பதோடு மேலும் பிராந்திய இணைப்பு, தொழில்துறை வளர்ச்சி மற்றும் துறைமுகம் சார்ந்தத் தளவாடங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்