இராமநாதபுரத்தின் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் நினைவாக கட்டப் பட்டு உள்ள 'மணிமண்டபத்தை' தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
CSIR–தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (CSIR–NIScPR) 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் அதன் 5வது ஸ்தாபன தினத்தைக் கொண்டாடியது.
இந்தியாவானது28வது காமன்வெல்த் நாடுகளின் பேச்சாளர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் (CSPOC) மாநாட்டை புது டெல்லியில் நடத்துகிறது.
1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட CSPOC அமைப்பில் 53 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த பேச்சாளர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் இதில் அடங்குவர்.
முன்னாள் படைவீரர்களின் சேவை மற்றும் தியாகத்தைக் கௌரவிக்கும் வகையில் இந்தியா ஜனவரி 14, 2026 ஆம் தேதியன்று நாடு தழுவிய அளவில் 10வது பாதுகாப்புப் படை வீரர்கள் தினத்தைக் கொண்டாடியது.
இந்த நாள், ஜனவரி 14, 1953 அன்று ஃபீல்ட் மார்ஷல் K. M. கரியப்பா ஓய்வு பெற்றதை நினைவு கூரும் வகையில் கொண்டாடப் படுகிறது.