TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 22 , 2026 12 days 71 0
  • குழந்தைகள் கடத்தலைத் தடுப்பதிலும், குழந்தைகளை மீட்பதிலும் ஆற்றிய சிறப்பான பணிக்காக RPF காவல் ஆய்வாளர் சந்தன சின்ஹாவுக்கு இந்திய இரயில்வேயின் மிக உயர்ந்த சேவை விருதான அதி விஷிஷ்ட் இரயில் சேவா புரஸ்கார் விருது வழங்கப் பட்டது.
  • ஆசியாவிற்கு வெளியே அமைந்த மிக உயரமான சிகரமான அர்ஜென்டினாவில் உள்ள அகோன்காகுவா மலையை இந்திய மலையேற்ற நிபுணர் அரித்ரா ராய் வெற்றிகரமாக ஏறினார்.
  • மைக்கோரைசல் பூஞ்சை வலையமைப்புகள் குறித்த தனது ஆராய்ச்சிக்காக அமெரிக்க உயிரியலாளர் டோபி கியர்ஸ் சுற்றுச்சூழல் சாதனைக்கான டைலர் பரிசை வென்றுள்ளார்.
  • சிறந்த ஃபின்டெக் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) ஏற்பிற்காக இந்திய வங்கிகள் சங்க (IBA) வங்கி தொழில்நுட்ப விருதை கர்நாடக வங்கி வென்றது.
    • சிறந்தத் தொழில்நுட்ப திறமை பிரிவில் கர்நாடக வங்கி இரண்டாம் இடத்தைப் பிடித்தது மற்றும் சிறந்தத் தொழில்நுட்ப வங்கி, சிறந்த டிஜிட்டல் நிதி உள்ளடக்கம் மற்றும் சிறந்த டிஜிட்டல் விற்பனைப் பிரிவுகளில் அது சிறப்பு அங்கீகாரத்தினைப் பெற்றது.
  • இந்தியாவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயிலின் முதல் வணிக ரீதியான இயக்கமானது வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே (NFR) மண்டலத்தினால் கௌஹாத்தி (காமக்யா) முதல் ஹவுரா வரை இயக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்