TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 24 , 2026 10 days 61 0
  • ஆறாவது ASEAN–இந்தியா டிஜிட்டல் அமைச்சர்கள் கூட்டம் (ADGMIN) ஆனது காணொளி வழியாக நடைபெற்றது.
  • சீனா டைப் 096 டாங்-கிளாஸ் எனப்படும் அதன் மிகவும் மேம்பட்ட உந்துவிசை எறிகணை நீர்மூழ்கிக் கப்பலினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டம் ஆனது சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்றது.
  • உலகளாவிய ஜனநாயக மாநாடு (GDC) ஆனது Confronting Public Support for Anti-Democratic Leaders என்ற கருத்துருவுடன் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
  • அமெரிக்காவில் உள்ள மெண்டோட்டா ஏரிக்கு அடியில் 5,200 ஆண்டுகள் பழமையான மரப் படகை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், இது ஆரம்பகால மனித வாழ்க்கை மற்றும் மேம்பட்ட மரவேலைப்பாடுகள் திறன்கள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்துகிறது.
    • அவற்றில் பழமையான கிமு 3000 ஆம் ஆண்டிற்கு முந்தையது என்ற பதிவு காணப் படுவதுடன் மொத்தம் 16 பழங்கால தோணிப் படகுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பதோடு இது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட சில மீன்பிடி நடவடிக்கைகளையும் குறிக்கின்றது.
  • மென்கேஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சிகிச்சையளிக்க ஜைகுபோ மருந்தினை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அங்கீகரித்தது.
    • மென்கேஸ் நோய் என்பது உடலில் தாமிர வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கும் ஒரு அரிய X  குரோமோசோமுடன் இணைக்கப்பட்ட மரபணுக் கோளாறு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்