ஆறாவது ASEAN–இந்தியா டிஜிட்டல் அமைச்சர்கள் கூட்டம் (ADGMIN) ஆனது காணொளி வழியாக நடைபெற்றது.
சீனா டைப் 096 டாங்-கிளாஸ் எனப்படும் அதன் மிகவும் மேம்பட்ட உந்துவிசை எறிகணை நீர்மூழ்கிக் கப்பலினை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டம் ஆனது சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்றது.
உலகளாவிய ஜனநாயக மாநாடு (GDC) ஆனது Confronting Public Support for Anti-Democratic Leaders என்ற கருத்துருவுடன் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
அமெரிக்காவில் உள்ள மெண்டோட்டா ஏரிக்கு அடியில் 5,200 ஆண்டுகள் பழமையான மரப் படகை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், இது ஆரம்பகால மனித வாழ்க்கை மற்றும் மேம்பட்ட மரவேலைப்பாடுகள் திறன்கள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்துகிறது.
அவற்றில் பழமையான கிமு 3000 ஆம் ஆண்டிற்கு முந்தையது என்ற பதிவு காணப் படுவதுடன் மொத்தம் 16 பழங்கால தோணிப் படகுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பதோடுஇது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட சில மீன்பிடி நடவடிக்கைகளையும் குறிக்கின்றது.
மென்கேஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சிகிச்சையளிக்க ஜைகுபோ மருந்தினை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அங்கீகரித்தது.
மென்கேஸ் நோய் என்பது உடலில் தாமிர வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கும் ஒரு அரிய X குரோமோசோமுடன் இணைக்கப்பட்ட மரபணுக் கோளாறு ஆகும்.