TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 28 , 2026 4 days 40 0
  • இந்தியக் கடலோரக் காவல்படையும் ஜப்பான் கடலோரக் காவல்படையும் இணைந்து மும்பையில் அபாயகரமான மற்றும் நச்சுப் பொருட்கள் (HNS) பதிலெதிர்ப்பு தொடர்பான ஒரு கூட்டுப் பயிற்சி ஒத்திகையை நடத்தின.
  • செர்பிய டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 400 ஒற்றையர் பிரிவு போட்டிகளில் வெற்றிகளைப் பெற்ற முதல் வீரராக மாறியுள்ளார்.
  • குஜராத் மாநிலதில் உள்ள சனந்த் (கோராஜ்) என்னுமிடத்தில் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தனியார் செயற்கைக்கோள் உற்பத்திப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டப் பட்டது.
  • பிரதமர், அசாமில் உள்ள NH-715 நெடுஞ்சாலையில், 6,957 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 34.5 கிலோமீட்டர் நீளமுள்ள காசிரங்கா மேம்பால வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
    • இது சாலைக்குக் கீழே விலங்குகள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல அனுமதிப்பதன் மூலம் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்