லெப்டினன்ட் கே. எம். சுதா, தேசிய மாணவர் படை (NCC) அதிகாரிகளுக்கான பயிற்சி நிகழ்வில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த முதல் நபர் ஆக மாறியுள்ளார் .
ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்திலிருந்து மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) அதிகாரியாக இணைந்த முதல் பெண்ணாக சிம்ரன் பாலா என்பவர் உருவெடுத்து உள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் சரண்டா வனப்பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்புக்குப் எதிராக மெகாபுரு நடவடிக்கை எனும் ஒரு பெரிய அளவிலான மாவோயிசப் பதிலெதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், ஜனவரி 27 அன்று சர்வதேச இனப்படுகொலை நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஒப்பந்தம் 108 கையெழுத்தானதைக் குறிக்கும் வகையில் தரவு தனியுரிமை தினம், ஜனவரி 28 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இது டிஜிட்டல் யுகத்தில் தரவுப் பாதுகாப்பு, தனியுரிமை உரிமைகள் மற்றும் தனிப்பட்ட தரவுகளைப் பொறுப்புடன் கையாள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.