எல்லைப்புறச் சாலைகள் அமைப்பானது (BRO) ஜனவரி 2026ல், கனமழை மற்றும் பனிப்பொழிவுக்குப் பிறகு சடர்கலா கணவாயில் சாலை இணைப்பை மீட்டெடுத்து, ஒரு மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கை ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சதர்கலா கணவாயில் (10,500 அடி) சம்பர்க் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர், ராணிப்பேட்டையின் முதல் கார் உற்பத்தி ஆலையை, பனப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) வளாகத்தில் திறந்து வைக்கவுள்ளார்.
இது மின்சார வாகனங்களில் நிபுணத்துவம் பெற்ற, டாடா மோட்டார்ஸுக்குச் சொந்தமான, சொகுசு வகை ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) கார் மாடல்களைத் தயாரிக்கும் இந்தியாவின் முதல் ஆலையாகும்.
புகழ்பெற்ற கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் சமீபத்தில் காலமானார்.
சமச்சீர் கல்வி முறையை உருவாக்கிய குழுவில் அவர் ஒரு உறுப்பினராக இருந்ததுடன், அகில இந்தியக் கல்வி உரிமை மன்றத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் பணியாற்றினார்.
ஓடிசாவின் பாரதீப் துறைமுக ஆணையமானது 'ஆண்டின் தூய்மையான துறைமுகமாக' தேர்ந்தெடுக்கப் பட்டதுடன் ஸ்வச்சதா பக்வாடா விருதுகள் 2025-ல் முதல் பரிசையும் வென்றது.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, SpaceX மற்றும் xAI நிறுவனங்களின் இணைப்புக்குப் பிறகு, எலோன் மஸ்க் 800 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பைத் தாண்டிய வரலாற்றின் முதல் நபராக மாறியுள்ளார்.
பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 15, 2026 வரை அனுசரிக்கப்படும் சாக்சம் (சம்ரக்சன் சமதா மகோத்சவம்) 2026 எனும் எரிபொருள் சேமிப்புப் பிரச்சாரம் சண்டிகரில் தொடங்கப் பட்டது.
கடல்சார் தளவாடங்களை வலுப்படுத்தும் நோக்கில், பாரத் கொள்கலன் கப்பல் நிறுவனத்தை (BCSL) நிறுவுவதற்காக மத்திய அரசு பல்வேறு பங்குதாரர்களுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்தியாவும் சீனாவும் 2025 ஆம் ஆண்டில் 155.6 பில்லியன் அமெரிக்க டாலர் வரலாற்று இருதரப்பு வர்த்தகத்தைப் பதிவு செய்தன என்ற நிலையில் இது இந்த ஆண்டில் சுமார் 12% அதிகரித்து ள்ளது.
சீனாவிற்கான இந்திய ஏற்றுமதி 2025 ஆம் ஆண்டில் 9.7% அதிகரித்துள்ளது.
உலகளாவிய மத நல்லிணக்க வாரம் 2026 ஆனது, அமைதி, சகிப்புத்தன்மை, அகிம்சை மற்றும் சமயங்களுக்கு இடையேயான புரிதலை மேம்படுத்தும் நோக்கில், பிப்ரவரி 1 முதல் 7 வரை உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது.