TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 8 , 2026 16 days 56 0
  • தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றமானது (TNSCST) 38வது கேரள மாநில அறிவியல் மாநாட்டில் முதல் பரிசை வென்றது.
  • தமிழக முதல்வர், மறைந்த நடிகர் ‘கலைவாணர்’ என்.எஸ். கிருஷ்ணனின் சிலையை சென்னையில் திறந்து வைத்தார்.
  • தமிழக முதல்வர் மாமல்லபுரத்தில் மாநிலத்தின் முதல் ஒளிரும் பூங்காவைத் திறந்து வைத்தார்.
  • 13வது இந்தியா-கிர்கிஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சியான 'கஞ்சர்-XIII' அசாமின் மிசாமரியில் நடைபெற உள்ளது.
  • இந்திய விமானப்படை (IAF) தனது மிகப்பெரிய பகலிரவு விமானப்படை பயிற்சியான 'வாயு சக்தி-2026'-ஐ ராஜஸ்தானில் நடத்த உள்ளது.
  • மத்திய ரயில்வே அமைச்சகமானது, மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் (MAHSR) திட்டத்திற்காக வெட்டப்பட்ட மகாராஷ்டிராவின் பால்கரில் உள்ள இரண்டாவது மலைச் சுரங்கப்பாதை MT-6 முடிக்கப்பட்டுள்ளதாக  அறிவித்துள்ளது.
  • இந்திய ஆசிரியையான ரூபிள் நாகி, துபாயில் நடைபெற்ற உலக அரசாங்க உச்சி மாநாட்டில் ஒரு மில்லியன் டாலர் மதிப்புள்ள சர்வதேச ஆசிரியர் பரிசு 2026-ஐ வென்றுள்ளார்.
  • ஈரானிய பேட்மிண்டன் வீராங்கனையான சோரயா அகாஹே ஹஜிஹா, சர்வதேச ஒலிம்பிக் குழுவிற்கு (IOC) ஈரானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினராக மாறியுள்ளார்.
  • பூடான் அரசரின் ராணி தாயாரான கியால்யம் ஆஷி டோர்ஜி வாங்மோ வாங்சுக், 22வது உபேந்திர நாத் பிரம்மா ‘மனிதநேயப் போர்வீரர்’ விருது- 2025 ஐ பெற்றுள்ளார்.
  • உலகின் மிகப்பெரிய சர்வதேச நாடக விழாவான பாரத் ரங் மஹோத்சவத்தின் 25வது பதிப்பு ஹரியானாவின் ரோத்தக்கில் நடைபெற உள்ளது.
  • மத்திய அமெரிக்காவின் செயல்பாட்டில் உள்ள எரிமலைகளில் ஒன்றான வோல்கன் டி ஃபுயேகோ (Volcano of Fire) சமீபத்தில் குவாத்தமாலாவில் வெடித்தது.
  • இந்தியாவின் முதல் பிரத்யேக கண்ணாடி அருங்காட்சியகமானது, 'இந்தியாவின் கண்ணாடி நகரம்' என்று அழைக்கப்படும் உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.
  • திரிபுரா கிராமின் வங்கியானது (TGB), கிராமப்புற மற்றும் பகுதியளவு நகர்ப் புறங்களில் டிஜிட்டல் வங்கிச் சேவைகளையும் நிதி உள்ளடக்கத்தையும் விரிவு படுத்தும் நோக்கில், இந்தியாவின் முதல் பிராந்திய கிராமப்புற வங்கி (RRB) கூட்டாண்மை ரூபே கடன் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • வால்மார்ட் நிறுவனம் பிப்ரவரி 2026-ல் 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டிய உலகின் முதல் சில்லறை வர்த்தக நிறுவனமாக மாறியது.
  • NTPC Green Energy Limited (NGEL) நிறுவனமானது, ஆந்திரப் பிரதேசத்தின்  விசாகப் பட்டினத்திற்கு அருகிலுள்ள புடிமடகா பசுமை ஹைட்ரஜன் மையத்தில், இந்தியாவின் முதல் பெரிய அளவிலான பசுமை யூரியா உற்பத்தி அமைப்பை உருவாக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்