தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னையில் உள்ள எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் தமிழ்நாட்டில் முதன் முறையாக அமைக்கப் பட்டுள்ள ஜெர்மானிய தத்துவஞானியும் பொதுவுடைமைத் தலைவருமான கார்ல் மார்க்ஸின் சிலையைத் திறந்து வைத்தார்.
வ.உசிதம்பரனார் (VOC) துறைமுக ஆணையமானது, இந்தியாவில் ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பை நிறுவிய முதல் துறைமுகமாக மாறியுள்ளது.
DRDO அமைப்பானது, ஒடிசா கடற்கரையில் அணுசக்தித் திறன் கொண்ட அக்னி-3 உந்துவிசை (ballistic) ஏவுகணையை (நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணை) வெற்றிகரமாக பரிசோதித்தது.
ஜனவரி 30, 2026 நிலவரப்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 723.8 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது..
ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவானது ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை 2026-ஐ வென்றது.
புது டெல்லியில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், சாம்ராட் ராணா மற்றும் சுருச்சி சிங் ஆகியோர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டம், "2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு" என்ற திட்டத்தின் கீழ் 100% காப்பீட்டுப் பாதுகாப்பை அடைந்த இந்தியாவின் முதல் மாவட்டமாக மாறியுள்ளது.
இந்திய ரயில்வேயானது, இந்தியாவின் முதல் LNG-டீசல் இரட்டை எரிபொருள் DEMU (Diesel Electric Multiple Unit) ரயிலை அகமதாபாத்தில் உள்ள சபர்மதியில் அறிமுகப்படுத்தியது.
இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்த இரண்டு வயது ஜூட் ஓவன்ஸ், ஸ்னூக்கர் விளையாட்டில் பேங்க் ஷாட் மற்றும் டபுள்-பாட் ஷாட் ஆகியவற்றை அடித்த இளம் வீரர் என்ற இரண்டு கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்தார்.
மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையால் (CISF) ஏற்பாடு செய்யப்பட்ட வந்தே மாதரம் கடலோர சைக்கிளோத்தான்-2026 ஆனது, "வந்தே மாதரம்" தேசியப் பாடலின் 150 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் ஆந்திரப் பிரதேசத்திற்குள் நுழைந்தது.
மேஜர் ஜெனரல் பிபின் பக்சி (ஓய்வு), ஏர் மார்ஷல் ராஜேஷ் குமார் (ஓய்வு), தூதர் அனில் த்ரிகுனாயத் மற்றும் பிரிகேடியர் அகிலேஷ் பார்கவா (ஓய்வு) ஆகியோரால் எழுதப்பட்ட ‘Red Lines Redrawn: Operation Sindoor and India’s New Normal’ என்ற புத்தகம், இந்தியாவின் சிந்துர் நடவடிக்கை பற்றி விரிவாகக் கூறுகிறது.
மேகாலயாவின் கிழக்கு ஜெயிந்தியா மலைப்பகுதியில் உள்ள ஒரு சட்ட விரோத எலித் துளை நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சுமார் 4-5 அடி ஆழமுள்ள குறுகிய சுரங்கப்பாதைகளைப் பயன்படுத்தி நிலக்கரியை வெட்டி எடுக்கும் எலித் துளை சுரங்க முறையை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்கள் காரணமாக 2014-ஆம் ஆண்டில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் தடை செய்யப்பட்டது.