கர்நாடகாவின் கௌரிபிதனூரில், பெங்களூரின் FICCI மகளிர் அமைப்பால் (FLO) முதல் பெண்கள் தலைமையிலான தொழிற்பூங்கா திறந்து வைக்கப்பட்டது.
அருண் ஐஸ்கிரீம்ஸ் நிறுவனம் ஹைதராபாத்தில் உலகின் மிகப்பெரிய ஐஸ்கிரீம் சமூக விருந்தை ஏற்பாடு செய்து கின்னஸ் உலக சாதனை படைத்தது.
கோடக் மஹிந்திரா வங்கியானது, இந்தியாவில் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப் பட்ட வெளிநாட்டு துறைசார் முதலீட்டாளர் (FPI) உரிமத்தை வழங்கிய முதல் வங்கியாக ஆனது.
விமானப் போக்குவரத்துத் துறையில் நிலையான விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், ஏர்பஸ் நிறுவனம் குஜராத்தின் வதோதராவில் உள்ள கதி சக்தி விஸ்வவித்யாலயாவில் (GSV) ஒரு சிறப்பு மையத்தைத் (CoE) திறந்து வைத்துள்ளது.
சீனா, ஜியாங்சு மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய அழுத்தப்பட்ட காற்று ஆற்றல் சேமிப்பு (CAES) மின் நிலையத்தை இயக்கித் தொடங்கியுள்ளது என்ற நிலையில்இதன் சேமிப்புத் திறன் 2,400 மெகாவாட் மணிநேரம் மற்றும் மின் உற்பத்தித் திறன் 600 மெகாவாட் ஆகும்.
ஒடிசா மாநில முதலமைச்சர், சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதித்யா அலுமினியம் வளாகத்தில் இந்தியாவின் முதல் தட்டையான உருட்டப்பட்ட பொருட்கள் (FRP) அலுமினிய உற்பத்திப் பிரிவைத் திறந்து வைத்தார்.
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய மலையேற்ற வீரர் கபக் யானோ, அர்ஜென்டினாவில் உள்ள அகோன்காகுவா மலையின் சிகரத்தின உச்சியை வெற்றிகரமாக அடைந்தார்.
பிராந்திய இணைப்புத் திட்டம் – உடே தேஷ் கா ஆம் நாக்ரிக் (RCS–UDAN) திட்டத்தின் கீழ், முன்னுரிமையற்ற பகுதிப் பிரிவில் உத்தரப் பிரதேசம் “மிகவும் முனைப்பான மாநிலம்” என்ற விருதைப் பெற்றது.