TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 15 , 2026 8 days 53 0
  • காவல் துறையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, "திருநெல்வேலி மாவட்ட காவல் செய்திகள்" என்ற வலையொலி (YouTube) சேனலைத் தொடங்கியது என்பதோடு இந்த மாநிலத்தில் இந்த வகையில் இதுவே முதல் முறை ஆகும்.
    • இதில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து மாணவர்களுக்கு சிறப்புப் பதிவுகளும் உருவாக்கப்படும்.
  • மும்பை கடற்கரை சாலையில், நரிமன் பாயிண்டிலிருந்து வொர்லி வரை வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் இந்தியாவின் முதல் இசைச் சாலையை மும்பை கடற்கரை சாலை அறிமுகப்படுத்தியது.
  • டெல்லி மெட்ரோ ரயிலின் மெஜந்தா பாதையானது, டெல்லி மெட்ரோ வலை எமைப்பின் மிக நீளமான வழித்தடமாக மாறவுள்ளது என்பதோடு இது சுமார் 89 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும்.
  • மக்கள் தொடர்பு ஊடகமாக வானொலியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட, உலக வானொலி தினம் பிப்ரவரி 13, 2026 அன்று உலகளவில் அனுசரிக்கப் பட்டது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு - “Radio and Artificial Intelligence: AI is a tool, not a voice” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்