TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 18 , 2026 5 days 63 0
  • இந்திய ராணுவம் முதன்முதலில் சர்வதேச Military Adventure Challenge Cup (IMACC ) 2026 என்ற நிகழ்வினை கிழக்கு இமயமலைப் பகுதியில் நடத்தவுள்ளது.
    • பூடான், பிரேசில், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், நேபாளம், இலங்கை மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ராணுவ அணிகள் இந்த நிகழ்வில் பங்கேற்கும்.
  • இந்திய விமானப்படை (IAF), தாய்லாந்து விமானப்படை (RTAF) உடன் இணைந்து, இரு படைகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் இயங்குந் தன்மையை மேம்படுத்துவதற்காக ஒரு கூட்டு விமானப் பயிற்சியை நடத்தி வருகிறது.
  • இந்தியாவின் அசாமில் முதல் நீருக்கடியில் இரட்டைக் குழல் வடிவ சாலை மற்றும் ரயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
    • பிரம்மபுத்திரா நதியின் கீழ் கோப்பூர் (NH-15) மற்றும் நுமாலிகர் (NH-715) ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
  • மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக, WWF இந்தியா (இயற்கையான இந்தியாவிற்கான உலகளாவிய நிதியம்) உருவாக்கிய அதன் முதல் பல்லுயிர் மற்றும் கலாச்சார அம்ச வரைபடத்தை கோவா வெளியிட உள்ளது.
    • இந்த வரைபடம் பாரம்பரியக் கலை வடிவங்களையும், பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன, கடல் விலங்குகள், சதுப்புநிலங்கள் மற்றும் பூச்சிகள் உட்பட 48 பொதுவாகக் காணப்படும் உயிரினங்களையும் எடுத்துக்காட்டுகிறது
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), பிப்ரவரி 2026 இல் "அனைவருக்கும் யுவா AI" தேசிய AI எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், கௌஷல் ரத் என்ற கைபேசி வழி செயற்கை நுண்ணறிவு (AI) விழிப்புணர்வு முயற்சியைத் தொடங்கியது
  • மடகாஸ்கரில் உள்ள ஒரு முக்கியத் துறைமுக நகரமான டோமாசினா பகுதியில் கெசானி புயல் கரையைக் கடந்தது.
  • 2026 ஆம் ஆண்டு BRICS தலைமையின் ஒரு பகுதியாக, இந்தியா முதல் BRICS ஷெர்பா மற்றும் துணை-ஷெர்பா கூட்டத்தை புது தில்லியில் நடத்தியது.
    • இந்தியாவின் தலைமைப் பொறுப்பின் கருத்துரு "Building for Resilience, Innovation, Cooperation and Sustainability" என்பதாகும்.
  • அறிவுசார் துணிச்சல், பெரும் அறிவியல் சிந்தனை, ஆர்வம் மற்றும் உண்மைக்கான தேடலைக் கொண்டாடும் வகையில், சார்லஸ் டார்வினின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12 அன்று டார்வின் தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்