TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 19 , 2026 4 days 35 0
  • இந்தியப் பிரதமர், அசாமின் திப்ருகரில் உள்ள மோரன் பைபாஸில் வடகிழக்கு இந்தியாவில் முதல் அவசரகாலத் தரையிறங்கும் தளத்தை (ELF) திறந்து வைத்தார்.
  • புது தில்லியில் கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரத் போதன் AI மாநாடு 2026, கல்வியறிவு, கற்பித்தல், நிர்வாகம் மற்றும் பன்மொழி கற்றல் உள்ளிட்ட பள்ளிக் கல்வியை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
  • இந்தியாவின் முதல் தேசியப் பசு கலாச்சார அருங்காட்சியகம் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நிறுவப்படவுள்ளது.
  • ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் 2026 ஆம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLA) செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான டிஜிட்டல்வழி வருகைப்பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 10 மாத குழந்தையான ஆலின் ஷெரின் ஆபிரகாம், விபத்தில் இறந்த பிறகு, கேரளாவின் இளம் வயது உறுப்பு தானம் செய்தவராக மாறியுள்ளார்.
    • அவரது பெற்றோர்கள் அவரது உறுப்புகளை தானம் செய்து உயிர்களைக் காப்பாற்ற முடிவு செய்ததை அங்கீகரிக்கும் விதமாக, அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்