TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 20 , 2026 3 days 57 0
  • அமெரிக்கா முதன்முறையாக ஒரு இராணுவ சரக்கு விமானத்தைப் பயன்படுத்தி ஒரு சிறு (Micro) அணு உலையை வெற்றிகரமாக விமானம் மூலம் கொண்டு சென்றது.
    • சிறு அணு உலைகள் என்பது சிறிய அளவிலான மேம்பட்ட அணுசக்தி அமைப்புகள் ஆகும் என்பதோடு, அவை பொதுவாக 10 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்கின்றன.
  • FIDE (சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பு) அமைப்பு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் போட்டியான 2026 ஃப்ரீஸ்டைல் ​​சதுரங்க உலகச் சாம்பியன்ஷிப்பை, அதன்  இறுதிப் போட்டியில் ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்து மேக்னஸ் கார்ல்சன் வென்றார்.
  • சுற்றுலாத் துறையைப் பாதிக்கும் நெருக்கடிகள் மற்றும் இடையூறுகளைக் கையாள மீள்தன்மை மற்றும் நீடித்த சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17 அன்று உலக சுற்றுலா மீள்தன்மை தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Tourism Resilience in Action: From Crisis Response to Impactful Transformation" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்