TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 25 , 2026 2 hrs 0 min 6 0
  • பாலைவனப் போர் சூழல்களில் சுயமாக இயங்கும் K9 வஜ்ரா பீரங்கி அமைப்பின் செயல்பாட்டுத் தயார்நிலையை நிரூபிக்க, ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் இந்திய ராணுவம் Vajra Ghaat எனும் பயிற்சியை நடத்தியது.
  • இந்தியாவும் பிரான்சும் பாதுகாப்பு, எரிசக்தி, முக்கியக் கனிமங்கள், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் 21 ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்களை பரிமாறிக் கொண்டதம் மூலம் அவற்றின் உறவை சிறப்பு உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையாக மேம்படுத்தின.
  • அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 1,750 மெகாவாட் Demwe Lower Hydel திட்டத்திற்கு 2037 வரை 11 ஆண்டு சுற்றுச்சூழல் அனுமதி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • லோஹித் ஆற்றில் அமையும் இந்தத் திட்டத்திற்கு முதலில் 2010 இல் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டது;
  • செயற்கை நுண்ணறிவு (AI), தானியங்குதன்மை, மருந்து கண்டுபிடிப்பு மற்றும் உயிரி மருந்தியல் மேம்பாட்டை மையமாகக் கொண்டு, சர்வதேச வாழ்க்கை அறிவியல் உச்சி மாநாடான BioAsia 2026 இன் 23வது பதிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.
    • இந்த உச்சிமாநாட்டின் கருத்துரு "TechBio Unleashed – Artificial Intelligence (AI), Automation, and Revolutionary Changes in Life Sciences" என்பதாகும்.
  • பள்ளி மாணவர்களிடையே திரைமுன் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்து வாசிப்பை ஊக்குவிக்க கர்நாடக அரசு Mobile Bidi Pustaka Hidi எனும் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளது.
    • இந்தப் பிரச்சாரம் மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதையும், கவனம் செலுத்துதல் மற்றும் கல்வித் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த பேலா கிராமப் பஞ்சாயத்து, இந்தியாவின் முதல் நிகர-சுழிய உமிழ்வுப் பஞ்சாயத்தாக 2026 ஆம் ஆண்டு மும்பை காலநிலை வாரத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
    • பேலா கிராம் அதன் காலநிலை முயற்சிகளுக்காக 2024 இல் Carbon Neutral Vishesh Panchayat Puraskar விருதைப் பெற்றது.
  • தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் (NGT), உத்தரப் பிரதேச அரசாங்கத்திற்கு, அதிகாரப் பூர்வப் பதிவுகளில் சுவாவின் நிலையை "வடிகால்" என்பதிலிருந்து "நதி" என மாற்ற உத்தரவிட்டது.
    • சுவாவ் (சுவாவான் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது உத்தரப் பிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ரப்தி ஆற்றின் துணை நதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்