இந்தியக் கடற்படை தனது முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட படைப் பிரிவு பயிற்சி கப்பல் (CTS) 'கிருஷ்ணா'வை சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல்&டி கப்பல் கட்டும் தளத்தில் அறிமுகப்படுத்தியது.
குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், நாடாளுமன்ற உறுப்பினரிலிருந்து பிரதமர் வரையிலான அவரது பயணத்தை எடுத்துக் காட்டுவதற்காகவும், புது தில்லியில் Atal Bihari Vajpayee: The Eternal Statesman என்ற காபி மேசை புத்தகத்தை வெளியிட்டார்.
இந்தியாவின் முன்னணி கியூ விளையாட்டு வீரரான பங்கஜ் அத்வானி, Liber Win Champions Cup 2026 ஐ வென்று Liber Win-க்கான இந்திய விளம்பர தூதராக நியமிக்கப் பட்டார்.
Addverb நிறுவனமானது தளவாடங்கள் மற்றும் கிடங்குச் செயல்பாடுகளுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சக்கரங்கல் கொண்ட மனித உருவ ரோபோவான Elixis-W ஐ LogiMAT India 2026 இல் அறிமுகப்படுத்தியது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள டெல்லி மற்றும் மீரட்டை இணைக்கும் டெல்லி-மீரட் வழித் தடத்தில் இந்தியாவின் முதல் நமோ பாரத் விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பை (RRTS - பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு) இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்.
இந்தியாவில் நமோ பாரத் மற்றும் மெட்ரோ ரயில்கள் ஒரே நிலையத்திலிருந்தும் ஒரே பாதையிலும் இயங்குவது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்க எரிசக்தித் துறை அதன் கதிர்வீச்சு பாதுகாப்பு விதிகளில் இருந்து As Low As Reasonably Achievable (ALARA) கொள்கையை நீக்கியுள்ளது.
ALARA-ஆனது பொறியியல் கட்டுப்பாடுகளைப் பெருமளவு பயன்படுத்தி அதன் தேவையற்ற வெளிப்பாட்டைக் குறைப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் பாதுகாப்புக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது.