TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 27 , 2026 19 days 197 0
  • 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய AI தாக்க உச்சி மாநாட்டிற்குப் பிறகு, ஜெனீவாவில் (2027) மற்றும் 2028 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த உலகளாவிய AI உச்சி மாநாடுகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
  • ராப் ஜெட்டன் தனது 38 வயதில் நெதர்லாந்தின் இளம் வயது பிரதமராக பதவியேற்று உள்ளார்.
  • பி.வி.ஆர். சுப்பிரமணியம் தனது மூன்று ஆண்டு பதவிக் காலத்தை பிப்ரவரி 24, 2026 அன்று நிறைவு செய்ததை அடுத்து, நிதி ஆயோக்கின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நிதி சிப்பர் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.
  • இஸ்ரேலுக்கான இரண்டு நாள் பயணத்தின் போது, ​​இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் நெசெட் பிளீனத்தில் (இஸ்ரேல் நாடாளுமன்றம்) உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி மாறியுள்ளார்.
  • தேசிய குவாண்டம் திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் குவாண்டம் தொழில்நுட்ப வசதியை  ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதி திறக்கவுள்ளது.
  • துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்திய அரசியலமைப்பின் புதுப்பிக்கப் பட்ட தமிழ் மற்றும் குஜராத்தி பதிப்புகளை உபராஷ்டிரபதி பவனில் வெளியிட்டார்.
  • இந்திய ராணுவமும் அமெரிக்க ராணுவமும் இணைந்து பிப்ரவரி 23 முதல் மார்ச் 15, 2026 வரை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பக்லோவில் 16வது வஜ்ர பிரஹார் பயிற்சியை நடத்துகின்றன.
  • குஜராத்தின் வேராவலில் உள்ள இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் (EEZ) மீன்பிடிக்கான அணுகல் அனுமதி உத்தரவை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.
  • NPCI அமைப்பானது, 'UPI One World' பணக்கோப்புச் சேவையை, இந்திய AI தாக்க உச்சி மாநாடு 2026 இல் கலந்து கொண்ட 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கு விரிவுபடுத்தியது.
    • இந்த வசதி வெளிநாட்டுப் பயணிகள் இந்திய வங்கிக் கணக்கு இல்லாமல் UPI மூலம் வணிகர்களுக்கு  பணம் செலுத்த அனுமதிக்கிறது.
  • உலகிலேயே அதிக அளவில் குடை மிளகாயை (capsicum) உற்பத்தியை செய்யும் நாடாக சீனா உள்ளது.
    • இந்தியாவில், குறிப்பாக கோலார் மற்றும் பெங்களூரு கிராமப்புற மாவட்டங்களுடன் கர்நாடகா மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாகும் என்ற நிலையில் இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை இதனை உற்பத்தி செய்யும் பிற முக்கிய மாநிலங்களில் ஒன்றாகும்.
  • புழக்கத்தில் உள்ள தடுப்பூசியிலிருந்து பெறப்பட்ட போலியோ வைரஸ் வகை 2 (cVDPV2) ஐ எதிர்த்துப் போராட, உலக சுகாதார நிறுவனம் கூடுதலாக ஒரு புதிய வாய் வழி போலியோ சொட்டுமருந்து 2 (nOPV2) க்கு முதல்கட்ட அனுமதியளித்துள்ளது.
  • ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ரா மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய் குமார் சிங் ஆகியோரை தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மாநிலத் தகவல் ஆணையர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது.
    • கடந்த ஆண்டு டிசம்பரில் மாநிலத் தகவல் ஆணையர்களின் எண்ணிக்கையை ஆறிலிருந்து எட்டாக மாநில அரசு உயர்த்தியது.
  • நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரரும் காங்கிரஸ் தலைவருமான பொன்னப்ப நாடார் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
    • கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைப்பதில் மார்ஷல் நேசமணி உடன் இணைந்து அவர் ஆற்றியப் பங்கை இது அங்கீகரிக்கிறது.
  • உலக அமைதி, அறநெறிசார் தலைமைத்துவம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 23 அன்று உலக அமைதி மற்றும் புரிதல் தினம் கொண்டாடப் படுகிறது என்பதோடு இது 1905 ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற முதல் ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பின் கூட்டத்தைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்