திருநெல்வேலி நியோ டைடல் பூங்காவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மத்திய கல்வி அமைச்சர் புது தில்லியில் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும்வகையிலான AI-ஆதரவுடன் இயங்கும் டிஜிட்டல் கருவியாக Teacher App 2.0 செயலியை அறிமுகப் படுத்தினார் என்ற நிலையில் இது வகுப்பறை கற்றலை மேம்படுத்துவதற்கு கற்பித்தல் கருவிகள், டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் செயல்திறன் தளங்களை வழங்குகிறது.
எஃகுத் துறையின் மூத்த தலைவரான ஜதீந்தர் மெஹ்ரா காலமானார் என்பதோடு அவர் முன்னதாக எஸ்ஸார் குழுமத்தில் உலோகங்கள் மற்றும் சுரங்கப் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.
ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இந்திய ராணுவம் அக்னி வர்ஷா 2026 பயிற்சியை நடத்தியது.
தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS), வலையொலியில் நேரடியாக ஒளி பரப்பப் பட்ட சுகாதாரப் பராமரிப்புக்கான செயற்கை நுண்ணறிவு பாடத்திற்கு அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களைப் பெற்றதற்காக கின்னஸ் உலக சாதனை படைத்தது.
ஆஸ்திரேலிய பிரதேசத்தில் H5N1 என்ற பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப் படுத்தப்பட்ட முதல் பறவை இனமாக ஜென்டூ பெங்குயின்கள் மாறியுள்ளது.
தென்னக கடல் யானைகள் (southern elephant seals) மற்றும் அண்டார்டிக் கடல் நாய்களிலும் (Antarctic fur seals) அதிக நோய்க்கிருமி H5N1 திரிபு (கிளாட் 2.3.4.4b) கண்டறியப் பட்டுள்ளது.
சரி பார்க்கப்பட்ட மாசு குறைப்புக்கான அதன் முதல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட சுற்றுச்சூழல் விருதான Zero Prize-ஐ இந்தியா அறிமுகப்படுத்தியது.
காற்று, நீர் மற்றும் நில மாசுபாட்டைக் குறைப்பதற்காக தலா ₹1 கோடியுடன் இந்தப் பரிசு மொத்தம் ₹5 கோடி நிதியைக் கொண்டுள்ளது.
புது தில்லியில் நடைபெற்ற TERI (எரிசக்தி மற்றும் வள நிறுவனம்) 25வது உலக நீடித்த வளர்ச்சி உச்சி மாநாட்டின் போது, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) Him-CONNECT எனும் நிகழ்வை ஏற்பாடு செய்தது.
Him-CONNECT என்பது இந்திய நாட்டின் இமயமலைப் பகுதியைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களை புத்தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சில கொள்கை வகுப்பாளர்களுடன் இணைப்பதற்கான ஒரு தளமாகும்.