TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 1 , 2026 17 days 78 0
  • திருநெல்வேலி நியோ டைடல் பூங்காவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
  • மத்திய கல்வி அமைச்சர் புது தில்லியில் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும்வகையிலான AI-ஆதரவுடன் இயங்கும் டிஜிட்டல் கருவியாக Teacher App 2.0 செயலியை அறிமுகப் படுத்தினார் என்ற நிலையில் இது வகுப்பறை கற்றலை மேம்படுத்துவதற்கு கற்பித்தல் கருவிகள், டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் செயல்திறன் தளங்களை வழங்குகிறது.
  • எஃகுத் துறையின் மூத்த தலைவரான ஜதீந்தர் மெஹ்ரா காலமானார் என்பதோடு அவர் முன்னதாக எஸ்ஸார் குழுமத்தில் உலோகங்கள் மற்றும் சுரங்கப் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.
  • ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இந்திய ராணுவம் அக்னி வர்ஷா 2026 பயிற்சியை நடத்தியது.
  • தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS), வலையொலியில் நேரடியாக ஒளி பரப்பப் பட்ட சுகாதாரப் பராமரிப்புக்கான செயற்கை நுண்ணறிவு பாடத்திற்கு அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களைப் பெற்றதற்காக கின்னஸ் உலக சாதனை படைத்தது.
  • ஆஸ்திரேலிய பிரதேசத்தில் H5N1 என்ற பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப் படுத்தப்பட்ட முதல் பறவை இனமாக ஜென்டூ பெங்குயின்கள் மாறியுள்ளது.
    • தென்னக கடல் யானைகள் (southern elephant seals) மற்றும் அண்டார்டிக் கடல் நாய்களிலும் (Antarctic fur seals) அதிக நோய்க்கிருமி H5N1 திரிபு (கிளாட் 2.3.4.4b) கண்டறியப் பட்டுள்ளது.
  • சரி பார்க்கப்பட்ட மாசு குறைப்புக்கான அதன் முதல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட சுற்றுச்சூழல் விருதான Zero Prize-ஐ இந்தியா அறிமுகப்படுத்தியது.
  • காற்று, நீர் மற்றும் நில மாசுபாட்டைக் குறைப்பதற்காக தலா 1 கோடியுடன் இந்தப் பரிசு மொத்தம் 5 கோடி நிதியைக் கொண்டுள்ளது.
  • புது தில்லியில் நடைபெற்ற TERI (எரிசக்தி மற்றும் வள நிறுவனம்) 25வது உலக நீடித்த வளர்ச்சி உச்சி மாநாட்டின் போது, ​​சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) Him-CONNECT எனும் நிகழ்வை ஏற்பாடு செய்தது.
    • Him-CONNECT என்பது இந்திய நாட்டின் இமயமலைப் பகுதியைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களை புத்தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சில கொள்கை வகுப்பாளர்களுடன் இணைப்பதற்கான ஒரு தளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்