TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 5 , 2026 10 days 102 0
  • உயர்தர படங்களை உருவாக்குவதற்காக ஜெமினி 3.1 ஃப்ளாஷ் இமேஜ் என்று அழைக்கப்படுகிற புதிய AI மாதிரியான நானோ பனானா 2 ஐ கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), ஒடிசாவின் சந்திப்பூரில் இருந்து VSHORADS (மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு) ஏவுகணையின் மூன்று விமானச் சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது.
  • கடலூரில் உள்ள சில்வர் கடற்கரையில் முதல் கட்ட மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) முன்னோட்ட திட்டத்தின் கீழ் நீலக் கொடி கடற்கரையாக உருவாக்கப்பட்டுள்ளது.
  • மத்திய சுகாதார அமைச்சர் இமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டெட்டனஸ் மற்றும் வயது வந்தோருக்கான டிப்தீரியா (Td) தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்.
  • மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எரிசக்தி திறன் பணியகம் அதன் 25வது நிறுவன தினத்தை மார்ச் 3, 2026 அன்று புது தில்லியில் கொண்டாடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்