TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 6 , 2026 8 days 65 0
  • வாரணாசி ஒரு மணி நேரத்தில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பிடித்தது.
  • ஒடிசாவில் உள்ள 301 கி.மீ குர்தா சாலை-பாலங்கிர் ரயில் பாதை 100 ஆண்டுகளுக்கும் மேலான தாமதத்திற்குப் பிறகு முழுமையாக நிறைவடையும் தருவாயில் உள்ளது.
  • இந்தியாவின் சிறுத்தை மறு அறிமுகம் திட்டத்தின் கீழ் போட்ஸ்வானாவிலிருந்து ஒன்பது சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன என்பதோடு இதன் மூலம் நாட்டில் மொத்தச் சிறுத்தைகளின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
  • IUCN செந்நிறப் பட்டியலில் அருகி வரும் இனமாக பட்டியலிடப்பட்டுள்ள அழிந்து வரும் வன ஆந்தை, மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் முதல் முறையாகக் தென்பட்டது.
  • 14 வயது நிரம்பிய சிறுமிகளுக்கு, கார்டசில்-4 (Gardasil-4) தடுப்பூசியைப் வழங்கும் நாடு தழுவிய மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி இயக்கத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • இஸ்ரேலுடன் ஒருங்கிணைந்து அமெரிக்க இராணுவத்தால் ஈரானிய ராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்து, Operation Epic Fury எனும் ஒரு பெரிய கூட்டு இராணுவ நடவடிக்கை நடத்தப்பட்டது  
  • உரிமையியல் பாதுகாப்பு, பேரிடர் தடுப்பு மற்றும் தயார்நிலை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி உலக உரிமையியல் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைத் தடுக்கவும், நிர்வகிக்கவும் நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கவும் உலக உடல் பருமன் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டுக்கான கருத்துரு “8 Billion Reasons to Act on Obesity” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்