தமிழ்நாட்டின் முதலமைச்சர் புனல் (1916) என்ற தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறை தீர்க்கும் மையத்தை சென்னையில் தொடங்கினார்.
TU Wien மற்றும் start-up Cerabyte ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகச்சிறிய விரைவு குறியீட்டை (QR) உருவாக்கியுள்ளனர் என்பதோடுசுமார் 2 சதுர மைக்ரோ மீட்டர்கள் (பாக்டீரியத்தை விடச் சிறியது) அளவிலான இது கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கழுவேலி ஈரநிலப் பறவைகள் சரணாலயத்திற்கு அருகிலுள்ள அகரம் காப்புக் காடுகள் பகுதியில் சர்வதேசப் பறவை மையத்திற்கு (IBC) தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
யுவான் வம்சத்தைச் (1271–1368) சேர்ந்த பீங்கான் பொருட்களை ஏற்றிச் சென்ற 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கப்பலின் சிதைவுகள் சிங்கப்பூர் கடற்பகுதியில் கண்டறியப் பட்டது என்பதோடு இது சுமார் 650 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியால் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பதோடுமேலும் இவர் தேர்ந்தெடுக்கப் பட்டால் இந்தியாவின் முதல் வெளிப்படையான LGBTQ+ நாடாளுமன்ற உறுப்பினராக மாறுவார்.
ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் அணுசக்தி தொடர்பான தளங்களை குறிவைத்து, இஸ்ரேல் 'லயன்ஸ் ரோர் நடவடிக்கை' (Operation Lion’s Roar) என்ற பெயரில் ஒரு முன்னெச்சரிக்கை தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகம், 16 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலையை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பியுள்ளது.
இந்தச் சிலை முதலில் தமிழ்நாட்டின் தாடிகொம்புவில் உள்ள ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது.
ஹான்சன் நோய் என்றும் அழைக்கப்படும் தொழுநோயை ஒழித்ததற்காக உலக சுகாதார அமைப்பால் (WHO) சரிபார்க்கப்பட்ட முதல் அமெரிக்க நாடாகவும், உலகளவில் இரண்டாவது நாடாகவும் சிலி மாறியுள்ளது.
ஆயுதக் குறைப்பு, ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் அணு ஆயுதங்களின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சர்வதேச ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடை விழிப்புணர்வு தினம் மார்ச் 5, 2026 அன்று அனுசரிக்கப்பட்டது.