அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஒருங்கிணைந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மற்றும் அருகிலுள்ள பிராந்திய ராணுவ தளங்களைக் குறி வைத்து True Promise 4 என்ற ஏவுகணைத் தாக்குதல் நடவடிக்கையை ஈரான் தொடங்கியது.
நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தின் 55வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
அசாமின் புவிசார் குறியீடு கொண்ட கர்பி அங்லாங் இஞ்சி 1.2 மெட்ரிக் டன் சோதனை சரக்குடன் முதன்முறையாக லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
கர்பி அங்லாங் இஞ்சி அசாமில் உள்ள கர்பி அங்லாங் மாவட்டத்தின் சிங்கசன் மலைகளில் ஜும் மற்றும் திலா சாகுபடி முறைகளைப் பயன்படுத்தி வளர்க்கப் படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் 27 வருட இடைவெளிக்குப் பிறகு டெல்லின் பாரத மண்டபத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர்களுடன் ஒரு தேசிய வட்டமேசை மாநாட்டை நடத்தியது
இதன் கடைசி மாநாடு 1999 இல் நடைபெற்றது.
மனித கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதி உலகப் பாலியல் சுரண்டலுக்கு எதிரான போராட்ட தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஆயுதங்களைக் குறைப்பது மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 5 ஆம் தேதி சர்வதேச ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடை விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப் படுகிறது.
2026 ஆம் ஆண்டுக்கான கருத்துரு "It is time to invest in the architecture of peace, not the tools of war" என்பதாகும்.