TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 10 , 2026 2 days 79 0
  • இந்தியாவில் உள்ள செயற்கை நுண்ணறிவுடன் (AI) கூடிய புத்தொழில் நிறுவனங்களை ஆதரிக்க சர்வம் AI நிறுவனம் ஆனது, 'சர்வம் புத்தொழில் திட்டத்தை' (Sarvam Startup Program) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இளைஞர்களின் திறன்களைக் கண்டறிந்து வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான திறன் கணக்கெடுப்பான 'க்சாம் திறன் கணக்கெடுப்பை' மும்பை புறநகர் மாவட்டம் தொடங்கியுள்ளது.
  • தேசிய நீர்வழி-2 என்ற பாதையின் பகுதியான, பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே இந்தியாவின் முதல் ஆற்றுவழிக் கலங்கரை விளக்கங்களை இந்தியா உருவாக்க உள்ளது.
  • உயிரித் தொழில்நுட்பம், பொருளாதாரக் கொள்கை மற்றும் கல்வி ஆகியவற்றில் உலகளாவிய தலைமை மற்றும் பங்களிப்பிற்காக, TIME இதழ் தனது '2026-ஆம் ஆண்டின் சிறந்த 16 பெண்கள்' பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரேஷ்மா கேவல்ரமணி, ரேஷ்மா சௌஜானி மற்றும் சஃபீனா ஹுசைன் ஆகிய மூவரைப் பெயரிட்டுள்ளது.
  • லட்சத்தீவின் கவரட்டி தீவில், கடல் வெப்ப ஆற்றல் மாற்றம் (OTEC) அடிப்படையிலான நாட்டின் முதல் ஒருங்கிணைந்த ஆலையை இந்திய அரசு நிறுவி வருகிறது.
  • மகாராஷ்டிராவின் ஜால்னாவில் நடைபெறும் 'ஹட்டி ரிசாலா' திருவிழா, 138 ஆண்டு காலப் பாரம்பரியத்தை நினைவு கூர்வதோடு, சமூக நல்லிணக்கம், கலாச்சார உள்ளடக்கம் மற்றும் சமூகப் பங்களிப்பை ஊக்குவிக்கிறது.
  • இந்தியாவின் பழங்குடியினச் சமூகங்களின் வளமான பாரம்பரியங்கள், கலைகள் மற்றும் வாழ்க்கை முறைகளைக் கொண்டாடும் வகையில், மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கில் உள்ள லோக் பவனில் 'டார்ஜிலிங் மலைத் திருவிழாவை' குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்.
  • 'சம்ஸ்காரா: உறுதிப்பாடு, இடமளித்தல், முன்னேற்றம்' (Samskara: Assertion, Accommodation, Advancement) என்ற கருத்துருவின் கீழ், Observer Research Foundation (ORF) மற்றும் வெளியுறவு அமைச்சகம் (MEA) இணைந்து 'ரைசினா பேச்சுவார்த்தை' 2026 என்ற நிகழ்வை புது தில்லியில் நடத்தியது.
  • மூளையில் சேதமடைந்த டோபமைனை உற்பத்தி செய்யும் நியூரான்களை மாற்றிமைக்க தூண்டப்பட்ட ப்ளூரிபோடென்ட் ஸ்டெம் செல்களை (iPS Cells) பயன்படுத்தும், பார்கின்சன் நோய்க்கான உலகின் முதல் ஸ்டெம் செல் சிகிச்சைக்கு ஜப்பான் ஒப்புதல் அளித்துள்ளது.
  • வெளிநாட்டினர் தமிழ்நாட்டின் வாழ்க்கை முறை, வேலை, கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் 'TNExpat' என்ற டிஜிட்டல் தளத்தைத் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • வானியலாளர்கள் 'ACES' (ALMA Central Molecular Zone Exploration Survey) தரவுகளைப் பயன்படுத்தி பால்வெளி மண்டலத்தின் மையப் பகுதியின் இதுவரை கண்டிராத மிகப்பெரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்