தமிழக முதலமைச்சர் 'சென்னையின் 100 ஆண்டு பழமையான மரங்கள்' என்ற புத்தகத்தை வெளியிட்டார் என்பதோடுஇது நகரில் உள்ள நூறு ஆண்டுகளைக் கடந்த மரங்களை ஆவணப்படுத்தும் விரிவான வழிகாட்டியாகும்.
இப்புத்தகம் 'பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்' ஒரு பகுதியாகும் என்ற நிலையில் இது 100 ஆண்டுகளுக்கும் மேலான மரங்களை அறிவியல் பூர்வமாக ஆவணப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்க இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்ற நிலையில் இது தென் தமிழகத்தின் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
மகிஷாசுரனை துர்க்கை அம்மன் வென்றதைக் குறிக்கும் 10 நாள் திருவிழாவான கொல்கத்தா துர்கா பூஜை, 2026 ஆம் ஆண்டில் அக்டோபர் 17 முதல் 21 ஆம் தேதி வரை கொண்டாடப் படும்.
குனோ தேசியப் பூங்காவில் 'ஜுவாலா' என்ற சிறுத்தை ஐந்து குட்டிகளை ஈன்றெடுத்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 53ஐ எட்டியுள்ளது, இதன் மூலம் இந்தியாவில் பிறந்த சிறுத்தைக்குட்டிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
நீதித்துறையில் பெண்களின் சமமான பங்கேற்பை ஊக்குவிக்கவும், நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறை தலைமைப் பொறுப்புகளில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10 ஆம் தேதி 'சர்வதேசப் பெண் நீதிபதிகள் தினமாக கடைபிடிக்கப் படுகிறது.
புகையிலைப் பழக்கத்தைக் கைவிட்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற் கொள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 11 அன்று 'புகை பிடித்தல் எதிர்ப்பு தினம்' கடைபிடிக்கப்படுகிறது.