தமிழ்நாட்டின் வ.உ. சிதம்பரனார் துறைமுகம் இந்தியாவின் முதல் 'டிஜிட்டல் இரட்டை’ (Digital Twin) தளத்தைத் தொடங்கியுள்ளது என்ற நிலையில் துறைமுக உள் கட்டமைப்பு, கப்பல் நடமாட்டம், சரக்குகளைக் கையாளுதல் மற்றும் உபகரணங்களை நிகழ்நேரத் தரவுகளைக் கொண்டு கண்காணிக்கும் ஒரு மெய்நிகர் மாதிரி இதுவாகும்.
உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கண்காட்சியான பாரத் டெக்ஸ் 2026, மத்திய ஜவுளித்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது என்பதோடுஇது 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் புது தில்லியில் நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் இந்திய கடற் படை இணைந்து, கோவாவிற்கு அருகே போயிங் P-8I போஸிடான் விமானத்திலிருந்து ADC-150 (பொருட்களை வான்வழியாக விநியோகிப்பதற்கான கொள்கலன்-150) கொள் கலனை வெற்றிகரமாகச் சோதித்தன.
ADC-150 என்பது கடலில் உள்ள கடற்படைக் கப்பல்களுக்கு சுமார் 150 கிலோகிராம் வரையிலான பொருட்களை வான்வழியாக விநியோகிப்பதற்காக வேண்டி உள் நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஒரு கொள்கலன் ஆகும்.
அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து ஃப்ரீடம் ஷீல்ட் என்ற வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன என்பதோடு இது பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிரான இராணுவ ஒருங்கிணைப்பு மற்றும் தயார்நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளைக் கொண்டாடவும், அவர்களின் திறமைகள் மற்றும் இலட்சியங்களை அங்கீகரிப்பதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை மேம்படுத்தவும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பர்பிள் பெஸ்ட் நிகழ்ச்சி (Purple Fest) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14 அன்று சர்வதேச கணித தினம் (பை தினம்) அனுசரிக்கப் படுகிறது என்பதோடுகணித மாறிலி π (3.14) மற்றும் அன்றாட வாழ்க்கை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கணிதத்தின் முக்கியத்துவத்தை இது கொண்டாடுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Mathematics and Hope".