TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 17 , 2026 14 hrs 0 min 9 0
  • வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பானது  (NATO), நார்வேயில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 'கோல்ட் ரெஸ்பான்ஸ் 2026' எனும் ஆர்க்டிக் ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது என்பதோடு இது ஆர்க்டிக் போர்முறை மற்றும் நட்பு நாடுகளின் படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மையமாகக் கொண்டது.
  • இந்திய ராணுவம் சாகர் பந்து நடவடிக்கை திட்டத்தின் கீழ் இலங்கையில் ஒரு பெரிய பாலம் அமைக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்பதோடு இது தலைநகர் கொழும்பை பொருளாதார மையமான புத்தளத்துடன் இணைப்பதன் மூலம் மக்கள், பொருட்கள் மற்றும் அத்தியாவசியமான சேவைகளுக்கான போக்குவரத்தை மீட்டு எடுக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ரயில் பெட்டிக் கண்காட்சி (IRCE) சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) தொடங்கி வைக்கப்பட்டது.
  • பெங்களூருவின் நியூஸ்பேஸ் ரிசர்ச் டெக்னாலஜிஸ் தயாரித்துள்ள 'சேஷ்நாக்-150' என்ற நீண்ட தூரம் பாயும் தாக்குதல் ஆளில்லா விமானத்தை இந்தியா சோதனை செய்து வருகிறது.
  • அசாமில் விளையும் நறுமணமிக்க உள்நாட்டு ரகமான 'ஜோஹா' அரிசி, முதன் முறையாக 25 மெட்ரிக் டன் அளவில் கௌஹாத்தியில் இருந்து ஐக்கியப் பேரரசு (UK) மற்றும் இத்தாலிக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது.
  • இந்திய ரயில்வேயின் அதிக அடர்த்தி கொண்ட டெல்லி–மும்பை மற்றும் டெல்லி–ஹவுரா வழித் தடங்களில் 1,452 கி.மீ தூரத்திற்கு 'கவாச் 4.0' செயல்பாட்டுக்கு வந்து உள்ளது.
    • இது ரயில்களின் வேகத்தை தானாகவே கட்டுப்படுத்தி, நிறுத்துவதன் மூலம் ரயில் மோதல்களைத் தடுக்கும் ஒரு உள்நாட்டு தானியங்கி ரயில் பாதுகாப்பு (ATP) அமைப்பாகும்.
  • 2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மலேரியா மாநாடு (IMC) புது டெல்லியில் மார்ச் 7 முதல் 9 ஆம் தேதி  வரை நடைபெற்றது.
    • இம்மாநாட்டின் கருத்துரு "Discovery, Development and Delivery: Driving Malaria Elimination and Beyond" என்பதாகும்.
  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 13 அன்று உலக ரோட்ராக்ட் தினம் அனுசரிக்கப்பட்டது, இது ரோட்ராக்ட் இயக்கத்தின் 58-வது ஆண்டு விழாவைக் குறிக்கிறது.
    • உலகெங்கிலும் உள்ள ரோட்ராக்ட் கிளப்களின் வெற்றி மற்றும் தாக்கத்தை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இது கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்