TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 18 , 2026 14 hrs 0 min 29 0
  • ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில், ஆளில்லா அலைமேவு கலன்கள் (USVs) மற்றும் தன்னிச்சையாக நீருக்கடியில் இயங்கும் வாகனங்கள் (AUVs) உருவாக்கவும், கடல்சார் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை வலுப்படுத்தவும், உலகின் முதல் தன்னாட்சி கடல்சார் கப்பல் கட்டுதல் மற்றும் அமைப்புகள் மையத்தை இந்தியா நிறுவுகிறது.
  • இந்தியாவின் முதல் நிலம்-நீர் இரண்டிலும் இயங்கவல்ல ஆளில்லா விமானமான அவதார், AquaAirX Autonomous Systems நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • தூத்துக்குடி விமான நிலையத்தின் ஆங்கிலப் பெயரை "Tuticorin Airport" என்பதற்குப் பதிலாக "Thoothukudi Airport" என மாற்ற மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • வானொலி வானியலில் ஆற்றியப் பங்களிப்பிற்காக யஷ்வந்த் குப்தாவுக்கு எம்.பி. பிர்லா நினைவு விருது வழங்கப்பட்டது.
  • இஸ்ரோ 22 டன் உந்துவிசை கொண்ட CE20 கிரையோஜெனிக் என்ஜினின் கடல் மட்ட வெப்ப சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
    • இந்த CE20 என்ஜின், இந்தியாவின் கனரக ராக்கெட்டான LVM3-ன் மேல் நிலையில் உள்ள C25 கிரையோஜெனிக் பகுதிக்கு ஆற்றல் அளிக்கிறது.
  • போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் (NCB), 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டார்க்நெட் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட செய்திப் பரிமாற்றச் செயலிகள் மூலம் செயல்பட்டு வந்த "டீம் கல்கி" என்ற அகில இந்திய டார்க்நெட் போதைப்பொருள் வலையமைப்பை முடக்கியது.
  • அசாமின் மேற்கு கர்பி ஆங்லாங் மற்றும் டிமா ஹாசாவ் மாவட்டங்களில் அமைந்து உள்ள 120 மெகாவாட் லோயர் கோபிலி நீர்மின் திட்டத்தைப் பிரதமர் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்