அசாம் தேயிலைத் தோட்டங்களில் பிராகோனிடே குடும்பத்தைச் சேர்ந்த சிலோனஸ் (காரினிசிலோனஸ்) மகாதேப் என்ற புதிய ஒட்டுண்ணி குளவி இனம் கண்டறியப் பட்டு உள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் 189 ஆண்டுகளுக்குப் பிறகு ஹென்கெலியா மோனோ ஃபில்லா என்ற அரிய வகைத் தாவரம் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது, இது கெஸ்னேரியாசி குடும்பத்தைச் சேர்ந்தது; இது முதன்முதலில் 1836 ஆம் ஆண்டு சேகரிக்கப் பட்டது.
திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பேச்சி-வாழானி வனவிலங்கு சரணாலயத்தில் டிராவிடா பேரினத்தையும் மோனிலிகாஸ்ட்ரிடே குடும்பத்தையும் சேர்ந்த டிராவிடா வாழானியா என்ற புதிய மண்புழு இனம் கண்டறியப்பட்டுள்ளது.
1,143 கி.மீ நீளத்திற்கும் அதிகமான செயல்பாட்டு மெட்ரோ பாதைகளுடன் இந்தியாவின் மெட்ரோ ரயில் வலையமைப்பு உலகின் மூன்றாவது பெரிய வலை அமைப்பாக மாறியுள்ளது.
2014-ல் 5 நகரங்களில் வெறும் 248 கி.மீ. ஆக இருந்த மெட்ரோ வலை அமைப்பு தற்போது 29 நகரங்களுக்கு விரிவடைந்துள்ள நிலையில் இந்த விரைவான வளர்ச்சியானது, இந்தியாவை சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் வைக்கிறது
2026 ஆம் ஆண்டிற்கான தேசியப் பாரா தடகள சாம்பியன்ஷிப், மார்ச் 19 முதல் 21 ஆம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெறும்.
பழங்குடியின கலாச்சாரம் மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக புது டெல்லியில் 2026 ஆம் ஆண்டிற்கான பாரத் டிரைப்ஸ் ஃபெஸ்ட் தொடங்கப்பட்டது.
பிரேசில், 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடக அணுகலை ஒழுங்கு படுத்துவதற்காக புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
தூக்கமின்மை மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற தூக்கக் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலகத் தூக்க தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சமபகல்/உத்தராயணத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 13/2026) அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Sleep Well, Live Better" என்பதாகும் .
இணையவழி மற்றும் நேரடிச் சந்தைகளில் நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்தவும் உரிமைகளைப் பாதுகாக்கவும், 2026-ஆம் ஆண்டின் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் மார்ச் 15 அன்று அனுசரிக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Safe Products, Confident Consumers" என்பதாகும்.