தேர்தல் விழிப்புணர்வு மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க, திண்டுக்கல் மாவட்டம் 'திண்டு' என்ற தேவாங்கு விலங்கினைத் தேர்தல் சின்னமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தச் சின்னம், 2026 ஆம் ஆண்டு மார்ச் 7 அன்று தொடங்கப்பட்ட கடவூர் தேவாங்கு சரணாலயமானது முதல் தேவாங்கு பாதுகாப்பு மையத்தை நினைவு கூரும் வகையிலும் அமைந்துள்ளது.
நீர்வளம் குறித்த ஆராய்ச்சி மற்றும் கொள்கைகளில் ஆற்றிய பங்களிப்பிற்காக காவே மதனி 2026-ஆம் ஆண்டிற்கான ஸ்டாக்ஹோம் தண்ணீர் விருதை (Stockholm Water Prize) வென்றுள்ளார்.
வில்லியம் டால்ரிம்பிள் தனது The Golden Road: How Ancient India Transformed the Worldபுத்தகத்திற்காக 2026-ஆம் ஆண்டிற்கான மார்க் லிண்டன் வரலாற்று விருதை வென்று உள்ளார்.
மறுசுழற்சி மற்றும் நிலையான கழிவு மேலாண்மையை ஊக்குவிக்க ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 18 அன்று உலகளாவிய மறுசுழற்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Don’t Think Waste. Think Opportunity!" என்பதாகும்.
உலகம் முழுவதும் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று சர்வதேச மகிழ்ச்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Caring and Sharing" என்பதாகும்.