மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாம் அருகே அமெரிக்கா தலைமையிலான நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் பயிற்சியான சீ டிராகன் பயிற்சிக்காக இந்தியக் கடற்படை P-8I விமானத்தை நிலை நிறுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டு மார்ச் 17 அன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்த பிறகு, அர்ஜென்டினா உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது.
முன்னாள் தூதர் ஜாவேத் அஷ்ரஃப்பிற்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான லீஜியன் ஆஃப் ஹானர் (Legion of Honour) விருதின் 'கமாண்டர்' தகுதி வழங்கப்பட்டுள்ளது.
டாடா குழுமத்தின் தலைவரான N. சந்திரசேகரனுக்கு பிரிட்டன் நாட்டின் அரசு கௌரவ நைட்ஹுட் (KBE) விருது வழங்கியுள்ளது.
அஞ்சல் துறையின் கீழ் அவசரப் பொருட்களை வேகமாகவும் நம்பகத் தன்மையுடனும் அனுப்ப, அடுத்த நாள் டெலிவரி செய்யும் சேவையான "24 Speed Post " என்ற வசதியை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாயில் ஏற்படும் நோய்களைக் குறைக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று உலக வாய் சுகாதார தினம் அனுசரிக்கப் படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு "A Happy Mouth is a Happy Life" என்பதாகும்.
நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று உலக சிட்டுக் குருவிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு "I Love Sparrows" என்பதாகும்.
கலை, அறிவியல் மற்றும் அன்றாட வாழ்வில் வண்ணங்களின் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று சர்வதேச வண்ண தினம் அனுசரிக்கப் படுகிறது.
பனிப்பாறைகளின் இழப்பைச் சுட்டிக்காட்டவும், பனிப்பாறைகள் மற்றும் நீர் ஆதாரங்களின் ஆராய்ச்சி, விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும் மார்ச் 21 அன்று உலகப் பனிப்பாறைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.