TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 25 , 2026 2 days 40 0
  • சூரியக் குடும்பத்தில் வியாழனைச் சுற்றி 4 நிலவுகள் மற்றும் சனியைச் சுற்றி 11 நிலவுகள் என மொத்தம் 15 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக Minor Planet Centre (சர்வதேச வானியல் ஒன்றியத்தின் ஆதரவின் கீழ்) அறிவித்துள்ளது.
  • தொலைத்தொடர்புத் துறையானது  (DoT), இந்தியாவின் தொலைத்தொடர்பு சூழலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு '100 5G பயன்பாட்டு ஆய்வகங்கள்' என்ற முன்னெடுப்பின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான 5G கண்டுபிடிப்பு ஹேக்கத்தான்-ஐ தொடங்கியது,
  • இந்திய மலையேற்ற வீரர் பூபதிராஜு அன்மிஷ் வர்மா, 92 நாட்கள், 4 மணி நேரம் மற்றும் 45 நிமிடங்களில் ஏழு எரிமலைச் சிகரங்களை கடந்து உலக சாதனை படைத்து உள்ளார்.
    • ஏழு எரிமலை சிகரங்கள் என்பது ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மவுண்ட் எல்பிரஸ் (ரஷ்யா), மவுண்ட் கிளிமஞ்சாரோ (தான்சானியா) மற்றும் மவுண்ட் சிட்லி (அண்டார்டிகா) ஆகியவை அடங்கிய மிக உயரமான எரிமலைகளாகும்.
  • சுரங்க அமைச்சகமானது சுரங்க நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மாவட்டக் கனிம அறக்கட்டளை (DMF) நிதியின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக புதுதில்லியில் 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய DMF உச்சி மாநாட்டினைத் நடத்தியது.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வாழ்க்கைச் சுழற்சி ஆதரவு மாதிரியை உருவாக்க கூட்டணி விருப்பத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளது.
  • பொம்மலாட்டப் பாரம்பரியத்தை ஒரு கலாச்சார கலை வடிவமாக மேம்படுத்தவும் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று உலகப் பொம்மலாட்ட தினம் கொண்டாடப் படுகிறது.
  • நன்னீரின் முக்கியத்துவம் மற்றும் நிலையான நீர் மேலாண்மை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Water and Gender", அதன் பிரச்சார முழக்கம் "Where Water Flows, Equality Grows" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்