சூரியக் குடும்பத்தில் வியாழனைச் சுற்றி 4 நிலவுகள் மற்றும் சனியைச் சுற்றி 11 நிலவுகள் என மொத்தம் 15 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக Minor Planet Centre (சர்வதேச வானியல் ஒன்றியத்தின் ஆதரவின் கீழ்) அறிவித்துள்ளது.
தொலைத்தொடர்புத் துறையானது (DoT), இந்தியாவின் தொலைத்தொடர்பு சூழலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு '100 5G பயன்பாட்டு ஆய்வகங்கள்' என்ற முன்னெடுப்பின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான 5G கண்டுபிடிப்பு ஹேக்கத்தான்-ஐ தொடங்கியது,
இந்திய மலையேற்ற வீரர் பூபதிராஜு அன்மிஷ் வர்மா, 92 நாட்கள், 4 மணி நேரம் மற்றும் 45 நிமிடங்களில் ஏழு எரிமலைச் சிகரங்களை கடந்து உலக சாதனை படைத்து உள்ளார்.
ஏழு எரிமலை சிகரங்கள் என்பது ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மவுண்ட் எல்பிரஸ் (ரஷ்யா), மவுண்ட் கிளிமஞ்சாரோ (தான்சானியா) மற்றும் மவுண்ட் சிட்லி (அண்டார்டிகா) ஆகியவை அடங்கிய மிக உயரமான எரிமலைகளாகும்.
சுரங்க அமைச்சகமானது சுரங்க நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மாவட்டக் கனிம அறக்கட்டளை (DMF) நிதியின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக புதுதில்லியில் 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய DMF உச்சி மாநாட்டினைத் நடத்தியது.
மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வாழ்க்கைச் சுழற்சி ஆதரவு மாதிரியை உருவாக்க கூட்டணி விருப்பத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளது.
பொம்மலாட்டப் பாரம்பரியத்தை ஒரு கலாச்சார கலை வடிவமாக மேம்படுத்தவும் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று உலகப் பொம்மலாட்ட தினம் கொண்டாடப் படுகிறது.
நன்னீரின் முக்கியத்துவம் மற்றும் நிலையான நீர் மேலாண்மை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Water and Gender", அதன் பிரச்சார முழக்கம் "Where Water Flows, Equality Grows" என்பதாகும்.