இந்தியா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 1 பில்லியன் டன்நிலக்கரி உற்பத்தியை எட்டியுள்ளது.
பணியிடப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்திய இரயில்வேதுறையானது SHINE (அதிகாரமளித்தலுக்காக பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த அறிவிப்பு) செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தச் செயலி மனிதவள மேலாண்மை அமைப்பு (HRMS) மூலம் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் குறித்து ரகசியமாகப் புகார் அளிக்க அனுமதிக்கிறது.
கிராமப்புற வீடுகளுக்கு அதிவேக இணைய வசதியை வழங்கவும், டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் உத்தரப்பிரதேசம்கங்கா திட்டம் எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இத்திட்டம் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 20 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற மற்றும் பகுதி நகர்ப்புற வீடுகளை நம்பகமான அகலப்பட்டைச் சேவைகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே நாடகக் கலையை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்றுகுழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான உலக நாடக தினம்கொண்டாடப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு,"Staging the Rights of Children. Today. Everyday." என்பதாகும்.
1950 ஆம் ஆண்டில் உலக வானிலை அமைப்பு (WMO) நிறுவப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்றுஉலக வானிலை தினம்கொண்டாடப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Observing Today, Protecting Tomorrow."என்பதாகும்.
கடவுளை நம்பாதவர்களை அங்கீகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்றுஉலக நாத்திக தினம்கடைபிடிக்கப்படுகிறது.