புது தில்லியில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான BRICS CCI WE (BRICS வர்த்தகம் மற்றும் தொழில்துறை மகளிர் அதிகாரமளித்தல் கூட்டமைப்பு) வருடாந்திர மகளிர் உச்சி மாநாட்டில், கல்பனா சோரன் 'Women Empowerment Trailblazer/மகளிர் அதிகாரமளித்தல் முன்னோடி' விருதைப் பெற்றார்.
தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT), தமிழ்நாட்டின் முட்டம் கடற்கரைக்கு அப்பால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிதக்கும் LiDAR மிதவை அமைப்பை வெற்றிகரமாகச் சோதித்தது.
இது லேசர் தொழில்நுட்பத்தைப் (LiDAR) பயன்படுத்தி, கடலில் காற்றின் வேகம் மற்றும் வானிலைத் தரவுகளை மிகத் துல்லியமாக அளவிடும் ஒரு மேம்பட்ட கடல்சார் தளமாகும்.
2024–25 ஆம் ஆண்டிற்கான சுய உதவிக் குழு வங்கி இணைப்பு திட்டத்தில் சிறந்த செயல்பாட்டிற்கான தேசிய விருதை கர்நாடகா கிராமின் வங்கி வென்றுள்ளது.
முதலாவது தேசிய உள்விளையாட்டு அரங்க தடகளச் சாம்பியன்ஷிப் போட்டிகள் புவனேசுவரில் உள்ள கலிங்கா மைதானத்தில் தொடங்கின.
இந்திய விமானப்படை (IAF), இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் மூலம் ஏவப்படும் ஆளில்லா விமான அமைப்பை உருவாக்க 'வாயு பாண்' திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து கீழே ஏவப்படும் ஒரு சிறிய தன்னிசையான ஆளில்லா விமானமான இது கண்காணிப்பு அல்லது தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும்.
காசநோய் (TB) குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Yes! We Can End TB: Led by countries, powered by people" என்பதாகும்.