இந்தியத் தாவரவியல் ஆய்வு மைய அறிவியலாளர்கள், அருணாச்சலப் பிரதேசத்தின் ஜிரோ பள்ளத்தாக்கு அருகே ஆக்டினிடியா இண்டிகா எனப்படும் புதிய வகை காட்டுக் கிவி பழ இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
ஊழல் எதிர்ப்பு ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ், குளோப் (GlobE) வலையமைப்பின் 12-வது வழிநடத்தல் குழு கூட்டத்தை இந்தியா புது தில்லியில் நடத்தியது.
ஐக்கிய நாடுகள் சபையினால் சிறை பிடிக்கப்பட்ட மற்றும் காணாமல் போன பணியாளர்களுடன் சர்வதேச ஒற்றுமை தினம் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 25 அன்று அனுசரிக்கப் படுகிறது.
பிறக்காத உயிரின் கண்ணியம் மற்றும் மதிப்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 25 அன்று பிறக்காத குழந்தைகளின் சர்வதேச தினம் அனுசரிக்கப் படுகிறது.
நாடகக் கலைகளை மேம்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 27 அன்று உலக நாடக தினம் கொண்டாடப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Theatre and a Culture of Peace" என்பதாகும்.