இந்திய விலங்கியல் ஆய்வு மையமானது (ZSI), மகாராஷ்டிராவின் புனேவில் டிஎன்ஏ அடிப்படையிலான வகைப்பாட்டியலைப் பயன்படுத்தி 'நியோலோபோப்டெரா பெனின்சுலாரிஸ்' என்ற புதிய கரப்பான் பூச்சி இனத்தைக் கண்டுபிடித்தது.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக இந்தியா வரும் எரிசக்தி கப்பல்களைப் பாதுகாக்க இந்திய கடற்படை உர்ஜா சுரக்சா என்ற நடவடிக்கையைத் தொடங்கியது.
பாலேந்திர ஷா, நேபாளத்தின் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் வயது பிரதமராகப் பதவியேற்றார்.
அதிகாரப்பூர்வ தரவுகளை உடனுக்குடன் பெறுவதற்காக, செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை இ-சாங்கியகி போர்ட்டலுடன் இணைக்க மாதிரிச் சூழல் நெறிமுறை (MCP) சேவையகத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.
AI மாதிரிகளை வெளிப்புறத் தரவு ஆதாரங்களுடன் பாதுகாப்பாக இணைத்து துல்லியத்தை மேம்படுத்தும் இந்த MCP-ஆனது ஆந்த்ரோபிக் (2024) நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு இலவச மூலத் தரவு ஆகும்.
செயற்கை நுண்ணறிவு சில்லு உற்பத்தியை அதிகரிக்க ஆஸ்டினில் டெராஃபேப் என்ற பெரிய குறைக்கடத்தி தயரிப்பு நிறுவனத்தை எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனமானது, Akasha300 3D அச்சுப் பொறியைப் பயன்படுத்தி, தனது வகையிலேயே முதலாவதான ஒரு 3D-அச்சிடப்பட்ட பூஸ்டர் எஞ்சினை சோதனை செய்துள்ளது.
அமெரிக்கா தனது கரன்சி/பணத்தாள் வடிவமைப்பில் அமெரிக்க டாலர் நோட்டுகளில் முதல்முறையாக அதிபர் டொனால்ட் டிரம்பின் கையொப்பம் சேர்க்கும் ஒரு மாற்றத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கான இந்தியாவின் முதல் டிஜிட்டல் தளமான 'MLATrack.com' ஐ கேரளா அறிமுகப்படுத்தியது.
பாலம் கட்டுமானத்தில் ஆய்வு மற்றும் ஒப்புதல் செயல்முறைகளை எளிதாக்க, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் புது தில்லியில் PRISM-SG தளத்தினை அறிமுகப்படுத்தியது.
புவி நேர (Earth Hour) நிகழ்வின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று இரவு 8:30 முதல் 9:30 மணி வரை முக்கிய நினைவுச்சின்னங்கள் மற்றும் கட்டிடங்களின் மின்விளக்குகளை அணைத்து இந்தியா பங்கேற்றது.
புவி நேரம் என்பது காலநிலை நடவடிக்கை மற்றும் எரிசக்தி சேமிப்பை ஊக்குவிப்பதற்காக இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தால் (WWF) ஆண்டு தோறும் நடத்தப்படும் நிகழ்வாகும்.