இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் நீலகிரியானது, ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு கடற்படையால் நடத்தப்பட்ட இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பன்னாட்டுக் கடற்படைப் பயிற்சியான 'ககாடு 2026' நடவடிக்கையில் பங்கேற்றது.
டொனால்ட் ட்ரம்ப், புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கட்டுவதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து $300 பில்லியன் மதிப்பிலான சுத்திகரிப்பு ஆலை கூட்டாண்மையை அறிவித்துள்ளார்,
CERN அறிவியலாளர்கள் முதல்முறையாக எதிர் புரோட்டான்களை சாலை வழியாக வெற்றிகரமாக கொண்டு சென்றனர்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம், இந்திய ராணுவத்திற்காக துங்குஸ்கா வான் பாதுகாப்பு எறிகணை அமைப்பை கொள்முதல் செய்ய JSC Rosoboronexport நிறுவனத்துடன் ₹445 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
பிரதமர், தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் (NCR) இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குப் பிறகு இரண்டாவது பெரிய சர்வதேச விமான நிலையமான நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதல் பிரிவை திறந்து வைத்தார்.
அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ லிமிடெட் நிறுவனமானது, திகி மற்றும் கோபால்பூர் துறைமுகங்களில் இந்தியாவின் முதல் 'அடைக்கலத் துறைமுகத்தை' (PoR) செயல் பாட்டிற்கு கொண்டு வந்தது.
அடைக்கலத் துறைமுகம் (PoR) என்பது ஆபத்தில் உள்ள கப்பல்களானது உயிர் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தஞ்சம் புகக்கூடிய ஒரு ஒதுக்கப்பட்ட இடம் ஆகும்.
உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட தெற்காசியாவின் மிகப்பெரிய B2B உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சிகளில் ஒன்றான, ஆஹார் 2026-இன் 40-வது பதிப்பு புது தில்லியில் நடைபெற்றது.
“நாகௌரி பான் மெதி” ஆனது தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் (PPVFRA) சமூக விவசாயிகள் வகையாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
டிரிகோனெல்லா கார்னிகுலேட்டா L. எனும் அறிவியல் பெயர் கொண்ட இது நாகௌர் மாவட்டத்தில் வளர்க்கப்படும் ஒரு பாரம்பரிய வெந்தய வகையாகும்.
டெல்லி-மும்பை விரைவுச்சாலையை ஜேவார் சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் ₹3,630.77 கோடி மதிப்பிலான புதிய/கிரீன்ஃபீல்ட் இணைப்புத் திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.